செங்கம் பழமையான அம்மச்சார் கோயில் திருப்பணிகள் துவக்கம்
செங்கத்தில் பழமையான அம்மச்சார் கோயில் திருப்பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
செங்கம் அருகே இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 100 ஆண்டுகள் பழமையான அம்மச்சார் அம்மன் கோவில் திருப்பணிக்காக ரூ.25 லட்சத்து 23 ஆயிரம் நிதி ஒதுக்கீடு , செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு ராஜாஜி வீதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான அம்மச்சார் அம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் சிதலம் அடைந்து பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலையில் இருந்தது. கோயிலுக்குள் நவகிரக கோவில் விநாயகர் கோவில் போன்ற கோவில்களும் சிதலமடைந்து மக்கள் தரிசிக்க முடியாத நிலையில் இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில் கோவில் திருப்பணி நடைபெறுவதற்காக அறநிலை துறை சார்பில் (பாலாலயம்) கோவில் திருப்பணி செய்வதற்காக ரூபாய் 25 லட்சத்து 23 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்து சமய அறநிலைத்துறை மற்றும் கோவில் திருப்பணி குழு இணைந்து கோவில் திருப்பணிகள் செய்வதற்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் இந்த கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நவகிரக கோவில் விநாயகர் கோவில் தரை மற்றும் கோவில் சுற்றுச்சுவர் போன்ற பணிகளும் நடைபெறும் எனவும் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்களிப்பு பெரிதாக திறக்க வேண்டும் எனவும் அரசு சார்பில் வழங்கக்கூடிய நிதி முழுமையாக பெற்றுத் தந்து கோவில் திருப்பணி சிறப்பாக முடிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசினார்.
இந்நிகழ்வில், செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் குணசேகரன், திருஞானம், மாதையன், ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், திருப்பணிக்குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.