குழியில் விழுந்து உயிரிழந்த பள்ளி சிறுவன் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்

குழியில் விழுந்து உயிரிழந்த பள்ளி சிறுவன் குடும்பத்திற்கு நிவாரண நிதியை எம்எல்ஏ வழங்கினார்.

Update: 2024-10-28 02:14 GMT

நிவாரண நிதியை வழங்கிய கிரி எம் எல் ஏ

செங்கம் அரு கே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பில்லர் குழியில் விழுந்து உயிரிழந்த பள்ளி சிறுவனின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ.4 லட்சம் பெறுவதற்கான ஆணையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மாணவரின் குடும்பத்தாருக்கு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் கடந்த 15-ம் தேதி த தொடர் மழை பெய்து வந்த நிலையில், வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பில்லர் குழி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. இதனை அறியாத 5-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் பார்த்திபன் மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது வீடு அந்தப் பில்லர் குழியில் மூழ்கி உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்த்திபனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி பார்த்திபன் உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் குறித்து மேல் செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணைசெய்தனர். இது தகவல் அறிந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததார், இதனையடுத்து அரசு சார்பில் பலியான பள்ளி மாணவன்பார்த்திபன் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரணத் தொகை ரூபாய் 4 லட்சம் அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பேரிடர் நிவாரண பெறுவதற்கான ஆணையை அவர்களது இல்லத்திற்கே சென்று இறந்தபார்த்திபனின் பெற்றோரிடம் வழங்கினார்.

நிகழ்வின்போது ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செந்தில்குமார், வட்டாட்சியர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் சீதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், கமலஹாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News