செங்கம் பகுதியில் உள்ள கிராமங்களில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு
செங்கம் பகுதியில் உள்ள துரிஞ்சிகுப்பம், கிலையூர் கிராமங்களில் வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் நேரில் ஆய்வு;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள துரிஞ்சிகுப்பம், கிலையூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக ஜாதி சான்றிதழ் குறித்த கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுகுறித்து செங்கம் பகுதியில் ஆர்டிஓ வெற்றிவேல் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்தப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இப்பகுதிகளில் துணை சுகாதார நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்தார்.