செங்கத்தில் 'தள்ளு மாடல் வண்டி இது, தள்ளி விடுங்க' அரசு பேருந்து

பராமரிப்பு இல்லாத காரணத்தால் பேருந்துகளை கைகளால் தள்ளி பேருந்தை இயக்க வேண்டிய நிலை;

Update: 2021-06-30 08:15 GMT

 'தள்ளு மாடல் வண்டி இது, தள்ளி விடுங்க' செங்கம் ஊத்தங்கரை அரசு பேருந்து 

கொரோனா ஊரடங்கு முடிந்து பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், செங்கத்திலிருந்து ஊத்தங்கரை செல்லும் அரசு பேருந்து மேல் புலியூர் பேருந்து நிலையம் அருகில் நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் பேருந்திலிருந்து கீழே இறங்கி கைகளால் தள்ளி பேருந்தை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பராமரிப்பு இல்லாத காரணத்தால் தான் இவ்வாறு பழுதாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். உடனடியாக அனைத்து பேருந்துகளும் பராமரிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News