அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
செங்கம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூா் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் அந்தனூா் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழுதடைந்த சிமெண்ட் சாலை தார் சாலைகளை சரி செய்ய வேண்டும்,
மழைக்காலங்களில் சாலையில் மழை நீர் கழிவுநீர் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு தோற்று நோய் பரவும் அபாயத்தை சரி செய்ய வேண்டும்
தடையில்லா குடிநீர் விநியோகம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் சர்தார் தலைமை வகித்தார் . மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மாதேஸ்வரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முத்தையின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மேலும் கண்டனக் கூட்டத்தில் பேசியவர்கள், பணி வழங்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யும் வேலைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
தற்போது அந்தனூர் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் ஆன சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட பல வசதிகள் செய்து தரக் கோரி பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் அளிக்கவில்லை எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் . ஆகையால் புறக்கணிக்கப்பட்ட ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலக நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தனர்.
இதில் தாலுகா நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்துல் மஜீத் பச்சையப்பன் பொருளாளர் ராஜா உள்ளிட்ட அந்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.