செங்கம் பகுதியில் மரம் ஏறும் கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம்
செங்கம் பகுதியில் தென்னை மரம் மற்றும் பனை மரம் ஏறுவோர் கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் காயம்பட்டு பக்கிரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனைமரம் தென்னைமரம் ஏறுவோர் கூலித் தொழிலாளர்கள் 300 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். செங்கம் சுற்றுப்புற வட்டார பகுதிகளில் மற்றும் வெளியூர்களில் பனைமரம் தென்னைமரம் கூலி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வரும் விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெருந்தலைவர் காமராசர் பனைமரம் தென்னை மரம் ஏறுவோர் பனை வெல்லம் காய்ச்சுவோர் உள்ளடக்கிய கூலித்தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண் தொழிலாளர்களுக்கு கூலி 750 பெண் தொழிலாளர்களுக்கு கூலி 330 என கூலி தொகையை வழங்கும் வரை யாரும் வேலைக்கு செல்வதில்லை தீர்மானம் நிறைவேற்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனை மரம் ஏறுபவர் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வலியுறுத்தி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்