தண்டாரம்பட்டு:மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

தண்டாரம்பட்டு காவல்நிலைய தலைமை காவலர் குடும்பத்திற்கு உடன் பணியாற்றிய காவலர்கள் நிதியுதவி

Update: 2021-06-12 07:03 GMT

தண்டாரம்பட்டு காவல்நிலைய தலைமை காவலர் குடும்பத்திற்கு உடன் பணியாற்றிய காவலர்கள் நிதியுதவி வழங்கினர்

திருவண்ணாமலை மாவட்டம், கிராமிய உட்கோட்டம், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் துரைமுருகன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 05.ம் தேதி  காலமானார். 

அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு உதவும் வகையில், அவருடன் பணியில் சேர்ந்த 1997-II பேட்ச் காவலர்கள் திரட்டிய ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்களின் முன்னிலையில் குடும்பத்தினரிடம் வழங்கினர். தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் அவர்கள் உடனிருந்தார்.

Tags:    

Similar News