வீட்டில் இறந்த மகள். சோகத்தில் காப்புக்காட்டில் விஷமருந்தி உயிரிழந்த தந்தை
திருவண்ணாமலை அருகே ஆசிரியர், மகள் அடுத்தடுத்து மரணம்: போலீசார் விசாரணை;
விருதுநகரை சேர்ந்தவர் சிவபாலன் 40; இவரது மனைவி ரம்பை 38; இவர்களது மகள் ஸ்ரீதேவிபிரியா 16; திருவண்ணாமலை அடுத்த சே.கூடலுார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக சிவபாலன் பணிபுரிந்து வந்ததால், சே.கூடலுார் அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவரது மகள் ஸ்ரீதேவிபிரியா நேற்று முன்தினம் மாலை உடல்நலக்குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதையடுத்து உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல் நேற்று வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிவபாலன் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் அப்பகுதியிலுள்ள கண்ணமடை காப்புகாட்டில் விஷம் குடித்தும் கையை கத்தியால் அறுத்து கொண்டும் இறந்து கிடந்துள்ளார்.
தகவலின்படி தச்சம்பட்டு போலீசார் அவரது சடலத்தை மீட்டனர். பின் மகள் மற்றும் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.