திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராய ஊறல் கீழே கொட்டி அழிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராய ஊறல் கீழே கொட்டி அழிப்பு

Update: 2021-08-31 13:43 GMT

தானிப்பாடி அருகே சாராய ஊறல் அழிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, மதுவிலக்குப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்குப்பிரிவு காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையில், உதவி ஆய்வாளர் சுமன் மற்றும் காவலர்கள் இணைந்து தானிப்பாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர்,

அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்கு அருகில் உள்ள ஆத்திப்பாடி காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 3800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது தலைமறைவான குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News