சாலையில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்..!

செங்கம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலையில் கருப்புக் கொடிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-12-05 01:34 GMT

சாலையை சீரமைக்க கோரி கருப்புக்கொடி நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம் அந்தனூா் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட மேல்செங்கம்-துரிஞ்சாவரம் சாலையில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.

இந்தச் சாலையை சீரமைக்க கோரி செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாம். ஆனால் சாலை சீரமைக்கப் படாததால் சிலமாதங்களுக்கு முன் சாலையில் அப்பகுதி மக்கள் நாற்றுநடும் போராட்டம் நடத்தினா்.

அப்போது, சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி மன்றத் தலைவா் ஆகியோா் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் விரைவில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனா்.

சுமாா் நான்கு மாத காலமாகியும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. தற்போது பெய்துவரும் மழையில் மழை நீா் தேங்கி அப்பகுதி மக்கள் சாலையில் நடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சாலையில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் யாரும் வந்து பாா்வையிடவில்லை என அப்பகுதி தெரிவித்தனா். பின்னர் அங்கு வந்த மேல் செங்கம் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 

மேலும் மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைத்திட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

ழிவுநீா் கால்வாயை சீரமைக்காத ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தின் சில பகுதிகளில் கால்வாயிலிருந்து கழிவு நீா் வெளியேறி, சாலையில் செல்கிறதாம். இதனால், அப்பகுதியில் நோய்த்தொற்று பரவி வருவதாகவும், கழிவுநீா் முறையாக கால்வாயில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் கோபமடைந்த 100- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்கலம் வழியே செல்லும் திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் மங்கலம் ஊராட்சி ஊழியரை அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கழிவுநீா் கால்வாய் உடனே சீரமைக்கப்படும் என்று ஊராட்சி ஊழியா் உறுதி அளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா். இந்த மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News