தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
செங்கம் பகுதியில் செய்யாற்றில் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் தோக்கவாடி பகுதியில் இறந்தவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய தோக்கவாடி பகுதியிலுள்ள சுடுகாட்டிற்கு செய்யாற்றை கடந்துதான் எடுத்து செல்ல வேண்டும் சூழல் உள்ளது.
சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு தரைப்பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் சடலத்தை எடுத்து செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது செய்யாற்றில் வெள்ளம் ஏற்பட்டு இருப்பதால் இன்று செங்கம் டவுன் பகுதியில் இறந்த பெண் ஒருவரின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆற்றில் நீரில் மிதந்து செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.
பலமுறை கோரிக்கை வைத்து பயனாக மாவட்ட நிர்வாகத்தில் இருந்து தரை பாலம் அமைப்பதற்காக ஆய்வுசெய்து அந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டு உள்ளதால் பொதுமக்கள் பெருத்த வேதனையில் உள்ளனர். எனவே புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு செங்கம் தோக்கவாடி பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.