அதிவேகத்தில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் செங்கம் பொதுமக்கள் அவதி..!
செங்கம் சாலையில் அதிவேகத்தில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி, நடவடிக்கை எடுக்க கோரிக்கை;
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரம் மற்றும் குப்பநத்தம் சாலைகளில் அதிவேகத்தில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏரி குளம் போன்றவற்றில் விவசாய நிலத்திற்கும் மண்பானைகள் செய்வதற்கும் அனுமதி பெற்று மண் எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மிக அறிவிப்பை தொடர்ந்து செங்கம் குப்பநத்தம் சாலையில் தினசரி இரவு பகலாக டிப்பர் லாரிகளில் முரம்பு மண் ஏரி மணல் செங்கல் சூளைகளுக்கு அளவில்லாமல் எடுத்து செல்கின்றனராம்.
இந்நிலையில் டிப்பர் லாரிகள் ஒப்பநத்தம் செங்கம் சாலையில் அதிக வேகத்தில் செல்கின்றன அந்தப் பகுதியில் 3 தனியார் பள்ளிகள் உள்ளது காலை மாலை என அந்த பள்ளிகளில் 30 பேருந்துகள் இந்த சாலையில் தான் செல்வது வழக்கம்.
அப்போது லாரிகளில் மண் அள்ளி வரும் அதன் ஓட்டுனர்கள் வழியில் அதிகாரிகள் மடக்கி சோதனை செய்வார்கள் என்ற பயத்தில் அதிவேகமாக ஓட்டி செல்கின்றனர்.
அப்போது அந்த சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளி குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்ட முடியாமல் திணறுகின்றனர்.
டிம்பர் லாரி இடித்து விடுமோ என்ற பயத்தில் தினசரி செல்ல வேண்டிய நிலை உள்ளது மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நல்ல நிலையில் விபத்தில் சிக்காமல் வீட்டுக்கு வருவார்களா என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் தினசரி ஏற்படுகிறது.
இதனால் செங்கம் குப்பநத்தம் சாலையில் அதிவேகமாக இயக்கப்படும் டிப்பர் லாரிகளை போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு , லாரியில் ஏற்றி வரும் மண் எங்கு எடுக்கப்படுகிறது ,அதற்கு முறையான அரசு உத்தரவு உள்ளதா, மேலும் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டும் , இந்த சாலையில் வேகமாக செல்வோர் மீது வழக்கு பதிய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.