செங்கம் அருகே 81 கிலோ பான்மசாலா பறிமுதல் - ஒருவர் கைது
செங்கம் அருகே 81 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
81 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அ.பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி, செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யானந்தன் உள்ளிட்ட போலீசார் காரப்பட்டு கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அருணாச்சலம் (வயது 42) என்பவர் வீட்டில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 81 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.