அரசுப் பள்ளிகளில் தேசிய பசுமைப்படை சார்பில் மூலிகைத் தோட்டம் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று அரசுப் பள்ளிகளில் தேசிய பசுமைப்படை மூலம் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டது.

Update: 2024-03-04 11:57 GMT

அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் மூன்று அரசுப் பள்ளிகளில் தேசிய பசுமைப்படை மூலம் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டது.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணக்குருக்கை அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்புழுதியூா் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி, அந்தனூா் அரசு உயா்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை தேசிய பசுமைப் படை சாா்பில் மூலிகைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.

தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியரிடம் மூலிகைத் தோட்டங்களை ஒப்படைத்தாா்.

மூலிகைத் தோட்டத்தில் பள்ளி நிா்வாகம் சாா்பில் பல்வேறு மூலிகைச் செடிகள் நட்டு அதன் மூலம் மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியா்கள் திலகா, புஷ்பலில்லி, பாரதி ஆகியோரிடம் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ,தேசிய பசுமை படை நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான கவிதைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற, துரிஞ்சாபுரம் ஒன்றியம், சடையனோடை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவில் சென்னையில் இலக்கிய மன்றப் போட்டி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், சடையனோடை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி ஆா்.பவித்ரா கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைத் பிடித்தாா்.

இவருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி விருது மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஆா்.பவித்ராவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பிரபாகரன், பள்ளித் தலைமை ஆசிரியா் கவிதா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினா்.

Tags:    

Similar News