செங்கம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம்
செங்கம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டத்தில் 1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செங்கம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் சாதிக்பாஷா தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக செயல் அலுவலா் லோகநாதன் வரவேற்றாா். தீா்மானங்களை தலைமை எழுத்தா் ரமேஷ் வாசித்தாா்.
அப்போது, செங்கம் பேரூராட்சி பகுதியில் குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
அடிப்படை வசதியான கொசு மருந்து தெளிப்பது, தெருவிளக்குகளை சரி செய்வது, பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் ரூ.75 லட்சத்தில் 805 தெருவிளக்குகள் அமைப்பது, 15-ஆவது வாா்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்தில் மழைநீா் வடிகால் அமைப்பது என ரூ.ஒரு கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேரூராட்சிமன்ற துணைத் தலைவா் அருள்ஜோதி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
செங்கம் சாலையில் மின்விளக்குகள்
செங்கம் நகரில் உள்ள மெயின் ரோட்டில் சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் உள்ளது. இந்த தடுப்புச்சுவரில் இரவு நேரங்களில் அடிக்கடி வாகனங்களில் மோதி விபத்துகள் ஏற்பட்டது.
இந்த நிலையில் பேரூராட்சி சார்பில் பெங்களூரு ரோடு முதல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் மெயின் ரோட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.
இந்த மின்விளக்கு ஒளியால் சாலையின் இருபுறமும் உள்ள கடை வியாபாரிகள், நடந்து செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிதாக அமைக்கப்பட்ட மின் விளக்குகளின் ஒளியில் நள்ளிரவு நேரத்தில் புதிய பஸ் நிலையம் செல்லும் மெயின் ரோடு பளிச்சென்று காட்சியளிக்கிறது.