செங்கத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை: எம்எல்ஏ வழங்கல்

பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

Update: 2021-10-25 13:26 GMT

மேல்ராவந்தவாடி ஊராட்சி பகுதிகளில் வாழும் 35 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி வழங்கினார்.

முதல்வரின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மேல்ராவந்தவாடி ஊராட்சி பகுதிகளில் வாழும் 35 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி, அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் செங்கம் ஒன்றிய கழக செயலாளர்  பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர்கள் , வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்,  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News