செங்கம் பகுதியில் புதிய நியாய விலை கடைகள் திறப்பு
செங்கம் பகுதியில் புதிய நியாய விலை கடைகளை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
செங்கம் பகுதியில் சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடைகள் மற்றும் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி பகுதியில் சுமார் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை, விண்ணவனூர் பகுதியில் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை மற்றும் 15 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் மற்றும் அரியாகுஞ்சூர் பகுதியில் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதிநேர நியாய விலை கடை மற்றும் 13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்டவை சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தர்.
மேலும் புதிய பகுதிநேர மற்றும் முழுநேர நியாய விலைக் கடைகள் மற்றும் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் உள்ளிட்டவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசியதாவது :
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தமிழகத் தி ல் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் தமிழக மக்களுக்கு என பல்வேறு திட்டங்கள் அறிவித்து, அந்த திட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய கூடிய திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது. தற்பொழுது தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் ஸ்டாலின் கலைஞர் வழியில் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாட்டில் பத்தாண்டு கால அ.தி.மு.க. அரசு எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் அறிவிப்புகள் மட்டுமே அறிவித்து சென்று விட்டனர். மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காக்கும் 48, கல்லூரி மாணவர்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 போன்ற திட்டங்கள் மூலம் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் ஆக தளபதி மு க ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பணி ஆற்றுகிறார் என பேசினார்.
நிகழ்ச்சியில் செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பதிவாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.