செங்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

செங்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்.

Update: 2022-04-22 05:07 GMT

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தை நேரில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமிநரசிம்மன் ஆய்வு செய்தார். 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், மரக்கன்று நடுதல் மற்றும் மரக்கன்றுகளை பராமரித்தல் பணிகளை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் டி.கே.லட்சுமிநரசிம்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

பெரியகோலாப்பாடி ஊராட்சியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி உள்பட செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் டி.கே.லட்சுமிநரசிம்மன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற் பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News