சூரிய ஒளி விழுந்ததில் பொன் நிறமாக மாறிய நந்தீஸ்வரர்
செங்கம் ஸ்ரீ ரிஷபேஸ்வரர் கோயிலில் நந்தீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்ததில் பொன் நிறமாக மாறிய அரிய நிகழ்வு நடைபெற்றது
செங்கம் ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி மூன்றாம் நாள் மாலை சூரிய ஒளி கோயிலில் கோபுரத்தில் விழுந்து பின்னர் சிறிது நேரத்தில் நந்தீஸ்வரர் மீது விழும்.
அந்த சில நிமிஷங்கள் நந்தீஸ்வரர் பொன்னிறமாக மாறி காட்சியளிப்பார் இந்த அரிய நிகழ்வை கண்டு பக்தர்கள் நந்தீஸ்வரரை வழிபட்டு செல்வர்.
நேற்று மாலை இந்த நிகழ்வை காண பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடினர்.
ஆனால் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோயில் கோபுரத்தின் மீது இரும்புத் தகடுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் சூரிய ஒளி கோபுரத்தின் மீது படவில்லை.
மாறாக நந்தீஸ்வரர் மீது மட்டும் சூரிய ஒளி குறைந்த அளவில் விழுந்து நந்தீஸ்வரர் பொன்னிறமாக மாறினார். இந்த நிகழ்வு சில நொடிகள் மட்டுமே நீடித்தது . பின்னர் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.