செங்கம் தொகுதியில் நியாய விலைக் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ
செங்கம் தொகுதியில் நியாய விலைக் கடையை திறந்து வைத்து பொருட்களை எம்எல்ஏ வழங்கினார்.
செங்கம் தொகுதி, தண்டராம்பட்டுஒன்றியத்திற்குட்பட்ட திருவடத்தனூர் ஊராட்சியில் ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டில் மேல்திருவடத்தனூரில் கட்டப்பட்ட பகுதிநேர நியாய விலைக் கடையின் புதிய கட்டிடத்தினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு நியாய விலை கடையில் வழங்கப்படும் பொருட்களை வழங்கினார்.
ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா
செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு வட்டாரத்திற்குட்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா மற்றும் தண்டராம்பட்டு வட்டார கல்வி அலுவலர் இளம்பரிதி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கியும் பணி நிறைவு பெறும் வட்டார கல்வி அலுவலர் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
அகற்றப்பட்ட அம்பேத்கார் சிலை அதே இடத்தில் அமைப்பதற்கான பணிகள் எம்எல்ஏ ஆய்வு
செங்கம் அருகே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அகற்றப்பட்ட அம்பேத்கரின் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான பணிகள் நடைபெறுவதை சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் தோக்கவாடி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் மார்பளவு சிமெண்ட் சிலை சிதலமடைந்து பழுதடைந்ததை அகற்றி அதே இடத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு முழு உருவ வெண்கல சிலையை அமைத்து அதன் திறப்பு விழாவிற்கான பணி நடைபெற்ற நிலையில் 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சிலை அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அகற்றப்பட்டது.
அந்த சிலை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திமுக ஆட்சி வந்த உடன் மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்தார்.
அதன்படி திமுக ஆட்சி அமைந்த உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, ஆலோசனையின் படி சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் கிரி அம்பேத்கரின் சிலை அமைப்பதற்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி அரசின் பாதுகாப்பில் உள்ள அம்பேத்கரின் சிலை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிலையை மீட்டு தோக்கவாடி பகுதி பொதுமக்களிடம் முறையாக ஒப்படைத்தார்.
ஒப்படைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை மீண்டும் புணர் அமைக்கப்பட்டு அதே இடத்தில் சிலை வைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதை சட்டமன்ற உறுப்பினர் கிரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
மேற்கண்ட நிகழ்வில் செங்கம் நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் முருகன், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ,கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.