பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை வரவேற்ற எம்எல்ஏ
செங்கம் வட்டத்தில் இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு எம்எல்ஏ கிரி இலவச பொருட்களை வழங்கி வரவேற்றார்;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று முதல் நாள் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவியர்களை சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் வரவேற்று புத்தகப்பை மற்றும் புத்தகம் , பேனா போன்ற இலவச பொருட்களை வழங்கி வரவேற்றார்..
நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத்தலைவர் பரிமலா கலையரசன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள், அனைவரும் கலந்து கொண்டனர்.