குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தண்ணீர் விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்டது;

Update: 2021-10-17 13:05 GMT

பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த செங்கம் எம்எல்ஏ கிரி

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக கன மழை பெய்து வந்தது. மேலும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இதனால் குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி விவசாய பாசனத்திற்காக அணையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தொழில்நுட்ப அதிகாரிகள் , ஒன்றிய தலைவர்கள்,  மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News