கர்மேல் மாதா கோவிலுக்கு தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்
கார்மேல் மாதா கோவிலுக்கு தார் சாலை அமைக்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கண்ணி கர்மேல் மாதா கோவிலுக்கு சுமார் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்தார்.
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், திருச்சபை நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.