செங்கம் அருகே புதிய நியாய விலை கடை திறப்பு
செங்கம் அருகே புதிய நியாயவிலை கடையை செங்கம் எம்எல்ஏ கிரி திறந்து வைத்தார் .
திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரம் ஊராட்சி தர்பார் பாளையத்தில் உள்ள பொதுமக்கள் அரசு நியாய விலை கடையில் வாங்க வேண்டிய பொருட்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வந்த நிலையில் தங்கள் பகுதியில் புதிய நியாய விலை கடை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையின் அடிப்படையில் தர்பார் பாளையத்தில் புதிதாக நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டு அதனைசெங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் நியாய விலை கடையில் பொருட்களை வழங்கியும் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சி வடகரை நம்மியந்தல் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி சுஜி, மழையில் சுவர் இடிந்து மாணவி மேல் விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு ரூ 4 லட்சம் நிவாரண நிதியை கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்தமேல்சோழங்குப்பம் ஊராட்சி வடகரை நம்மியந்தல் பகுதியைசேர்ந்த பள்ளி மாணவி பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மழை பெய்ததில் தன்னுடைய வீட்டில் சுவர் இடிந்து மாணவி சுஜி மேல் விழுந்து மாணவி சுஜி உயிரிழந்தார். இவரது குடும்பத்தாருக்கு சரவணன் எம்எல்ஏ ஆறுதல் கூறி அவரது குடும்பத்தாருக்கு நிவாரண உதவியாக ரூ 4 லட்சம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், துணை தாசில்தார் புவனேஸ்வரி, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.