அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
செங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் பரமனந்தல் , அரட்டவாடி , ஆண்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி , கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்
தமிழ்நாட்டில் பெண்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு இலவச திட்டங்கள் வகுத்து தந்தவர் கருணாநிதி. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை ,திருமண உதவித்தொகை, பெண்களுக்கு உள்ளாட்சி இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆவார்.
தற்பொழுது புதுமைப்பெண் திட்ட மூலம் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வழங்கும் திட்டம், தோழிகள் தங்கும் விடுதி, என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து திட்டங்களை நிறைவேற்றி அடித்தட்டு பெண்கள் கல்வியின் முன்னேற்றத்திற்காக ஒரு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதேபோன்று பெண்களின் வளர்ச்சிக்காகவும், பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு தற்போது திகைத்துதிகழ்ந்து வருகிறது என கூறினார்.
இதனைத் தொடர்ந்து செங்கம் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை வசதி குறித்தும், வகுப்பறைகள் அதன் உறுதித் தன்மை குறித்தும் தலைமை ஆசிரியரிடம் சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் செங்கம் நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் ஏழுமலை, மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார் ,சகுந்தலா ராமஜெயம் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் ,விஜயராஜ், ராமநாதன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் ,ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.