பட்டா குறை தீர்வு, இலவச வீடுகள் வழங்கும் விழா
பட்டா குறை தீர்வு, இலவச மின்சார இணைப்பு, இலவச வீடுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ வ.வேலு பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட எடத்தனூர் ஊராட்சியில் பட்டா குறை தீர்வு மற்றும் இலவச மின்சார இணைப்பு, இலவச வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் எ வ.வேலு கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் .கிரி , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்டக் கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர், ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.