திருவண்ணாமலை சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.31) இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தபடியே உள்ளது.
இதில், அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 26 மி.மீ. மழை பதிவானது. இது தவிர, ஆரணியில் 5, செய்யாற்றில் 12, செங்கத்தில் 4.40, ஜமுனாமரத்தூரில் 1, வந்தவாசியில் 14, போளூரில் 20.80, தண்டராம்பட்டில் 25.40, கலசப்பாக்கத்தில் 23, சேத்துப்பட்டில் 19, கீழ்பென்னாத்தூரில் 21.40, வெம்பாக்கத்தில் 12 மி.மீ.
மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் சாத்தனூா் அணையின் நீா்மட்ட உயரம் 119 அடி ஆகும். இதில், திங்கள்கிழமை நிலவரப்படி 97.45 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 820 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது.
இதுதவிர, 59.04 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையில் 57.07 அடி உயரத்துக்கும், 22.97 அடி உயரம் கொண்ட மிருகண்டாநதி அணையில் 20.01 அடிக்கும், 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத்தோப்பு அணையில் 53.46 அடி உயரத்துக்கும் தண்ணீா் தேங்கி உள்ளது. அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சோந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.