செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் பணி துவக்க விழா

செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் பணி துவக்க விழாவில் அமைச்சர் எ. வ. வேலு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்திப் பேசினார்;

Update: 2022-03-29 02:12 GMT

செங்கம் பேரூராட்சி தலைவர் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கினார்

செங்கம் பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற தலைவர் , துணைத்தலைவர் பணி துவக்க விழா  நடைபெற்றது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, தலைமை தாங்கினார்.

மாநில தடகள சங்க தலைவர் எ. வ. வே. கம்பன்,  ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார் .  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு, பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.

தொடர்ந்து தலைவர் சாதிக் பாஷா துணைத்தலைவர் அருள்ஜோதி ஆகியோரை இருக்கையில் அமைச்சர் அமரவைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள், வட்டாட்சியர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுப்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் துணைத்தலைவர் பணியை துவக்க விழா அமைச்சர் வாழ்த்து

இதே போல் புதுப்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் துணைத்தலைவர் பணியை துவக்க விழா  நடைபெற்றது. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன், தலைமை தாங்கினார்.

மாநில தடகள சங்க தலைவர் எ. வ. வே. கம்பன்,  ஒன்றிய குழுத்தலைவர் சுந்தரபாண்டியன் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி, அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து மன்றத்தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், துணைத்தலைவர் மகேஸ்வரி சீனிவாசன், ஆகியோரை இருக்கையில் அமரவைத்து  பொதுப்பணித்துறை அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பேசினார் .

முடிவில் துணைத்தலைவர் மகேஸ்வரி சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News