லம்பாடி சமூக மக்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
செங்கம் அருகே லம்பாடி சமூக மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்
செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட பொரசபட்டு,. தண்டா , தாழையூத்து, போன்ற பகுதியில் லம்பாடி சமூக மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சமூக மக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இவ்வாண்டு ஹோலி பண்டிகை திருவிழா நடைபெற்றது. லம்பாடி சமூக மக்கள் வீட்டுக்கு ஒரு மரம் வெட்டி வந்து அவற்றை ஒன்று சேர்த்து தீமூட்டி அனைவரும் புத்தாடை அணிந்து குலதெய்வத்துக்கு பூஜைகள் செய்து தீயை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்த தீயை சுற்றி வந்தால் அடுத்த ஓராண்டில் திருமணம் நடைபெறும் என்பது இவர்களின் நம்பிக்கை.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் அண்ணாதுரை , செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் கலந்துகொண்டு லம்பாடி சமூக மக்களுக்கு ஹோலிப்பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.