செங்கத்தில் ஒரு கோடி மதிப்பில் 13 இரட்டை உயர் கோபுர மின் விளக்குகள்..!

செங்கத்தில் ஒரு கோடி மதிப்பில் 13 இரட்டை உயர் கோபுர மின் விளக்குகள் ,எம்பி மற்றும் எம்எல்ஏ திறந்து வைத்தனர்

Update: 2024-08-05 02:38 GMT

உயர் மின் கோபுர விளக்குகளை திறந்து வைத்த அண்ணாதுரை எம்பி மற்றும் கிரி எம் எல் ஏ

செங்கத்தில் ரூ 1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 13 இரட்டை உயர் கோபுர மின் விளக்குகள் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பங்கேற்று திறந்து வைத்தனர்.

செங்கம், போளூர் மற்றும் குப்பநத்தம் மும்மனை சந்திப்பில் ரூ 1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரவுண்டானா, சாலைகள் விரிவாக்கம் மற்றும் மும்முனை சாலைகள் மைய பகுதியில் அமைக்கப்பட்ட 13 இரட்டை உயர் கோபுர மின் விளக்குகளை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏ கிரி பங்கேற்று திறந்து வைத்தனர்.

இதில் நகர செயலாளர் அன்பழகன் , தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மின்வாரிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கு நகர செயலாளர் அன்பழகன் சால்வை மற்றும் பிரம்மாண்ட ரோஜா மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.

பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி 

தண்டராம்பட்டில் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, வழங்கினார்.

செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு வட்டாரத்திற்குட்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா மற்றும் தண்டராம்பட்டு வட்டார கல்வி அலுவலர் இளம்பரிதி பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆசிரியர்களுகு்கு கையடக்க கணினிகளை வழங்கி, பணி நிறைவு பெறும் அலுவலரை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். விழாவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றியகுழு தலைவர் பரிமளாகலையரசன், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News