திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, எம்எல்ஏ கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்;

Update: 2021-10-02 10:53 GMT

தென்கரும்பலுர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம், தென்கரும்பலூர் ஊராட்சியில் கிராமசபா கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு தலைமையில் நடந்தது.

கிராமசபா கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் பல்வேறு விதமான கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின் தென்கரும்பலூர் ஊராட்சியில் உள்ள அடிப்படை வசதிகளையும், அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றப்படும் என சிறப்புரையாற்றினார்.

உடன் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

செங்கம் வட்டம் கொட்டையூர் ஊராட்சி, வாழவச்சனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..

ஊர் பொதுமக்கள் பல்வேறு விதமான கோரிக்கை மனுக்களை அளித்தனர் . ஊராட்சியில் உள்ள அடிப்படை வசதிகளையும், அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றப்படும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் சிவரஞ்சனி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News