வாணாபுரம் அருகே பாம்பு கடித்து அரசு பேருந்து டிரைவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே பாம்பு கடித்து அரசு பஸ் டிரைவர் உயிரிழந்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள எடக்கல் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 54), திருவண்ணாமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. உடனே அவர் சிகிச்சைக்காக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.