தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ. கிரி ஆய்வு கூட்டம்

தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிரி எம்.எல்.ஏ. ஆய்வு கூட்டம் நடத்தினார்.;

Update: 2023-06-09 15:11 GMT

ஆய்வுக் கூட்டத்தில் கிரி எம். எல். ஏ.  பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டுவட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் பி.டி.ஓ.க்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், துணை பி.டி.ஓ.க்கள், ஒன்றிய குழு செயலாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கூறுகையில்

கடந்த ஆட்சி காலத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இப்பொழுது அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள் முழுவதுமாக கிராமப்புறத்தில் உள்ள பயனாளிகளை சென்றடைய வேண்டும். அதற்கு அரசு அலுவலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் .அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடைவதற்கு அதிகாரிகள் நீங்கள் பணி செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கம் அருகே புதிய மின்மாற்றி அமைப்பு

செங்கத்தை அடுத்த புளியம்பட்டி, மணிக்கல் கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள், தங்களது பகுதியில் விவசாய பாசனத்துக்கு தண்ணீா் பாய்ச்சும்போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மேலும், மின் விநியோகம் சீராக இல்லாமல் இருப்பதால் விவசாயக் கிணறுகளில் இருக்கும் மோட்டாா்கள் பழுதடைகின்றன. விவசாயப் பயிா்களுக்கு குறித்த நேரத்தில் தண்ணீா் பாய்ச்ச முடியாமல் பயிா்கள் கருகும் நிலை ஏற்படுகிறது. இதனால், அப்பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என தொகுதி எம்எல்.ஏ. கிரியிடம் கோரிக்கை வைத்தனா். இதன் பேரில் பரிசீலனை மேற்கொண்டு அப்பகுதியில் ரூ.8 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொறியாளா் சங்கரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கிரி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய மின்மாற்றியை இயக்கிவைத்தாா். உதவி செயற்பொறியாளா்கள் இளங்கோவன், முனுசாமி, ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்ட ஊராட்சித் தலைவா் சிவஞானம், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News