செங்கத்தில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா
செங்கம் தொகுதியில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகளை பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர், ஆதரவற்ற விதவை, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தமிழக அரசின் இலவச வேட்டி சேலையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முனுசாமி , சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.