செங்கத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாம்; 300க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை
செங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.;
கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்த கிரி எம் எல் ஏ மற்றும் அண்ணாதுரை எம்பி
செங்கம் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி செங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர திமுக மற்றும் கணேச குழு சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமிற்கு கணேசர் குழு தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார்.
நகர திமுக செயலாளர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தனர்.
முகாமில் செங்கம் பகுதியை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோருக்கு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இதில் கண் புரை உள்ளவர்களுக்கு அரவிந்து கண் மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமில் செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், திமுக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் முருகன், சின்னம்மாள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோயில் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் கோபுர புனரமைப்பு பணியினை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில், நகர கழக செயலாளர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், பேரூர் தலைவர் சாதிக்பாஷா, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், கூட்டுறவு சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன், 5-வது வார்டு, ஏ. ஆர். ரகுமான் நகர், கோல்டன் சிட்டி, பாரத் பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூபாய் 1. கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் உடன் கூடிய புதிய தார் சாலை அமைக்கும் பணியினை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது, பேரூராட்சி தலைவர் சாதிக்பாட்ஷா, நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.