செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்

செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை கிரி எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update: 2022-09-11 11:44 GMT

தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டார். செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா, வட்டாட்சியர் முனுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 527 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், மனோகரன், நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருபாகரன், பள்ளி மேலாண்மை குழு முருகமணிரேவதி, மணி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News