திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் இலவச ஆதார் பதிவு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் இலவசமாக ஆதார் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-11 03:16 GMT

செங்கத்தில் பள்ளிகளில் ஆதார் முகாமினை துவக்கி வைத்த கிரி எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, திங்கள்கிழமை 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டத்தில் இயங்கி வரும் 2 ஆயிரத்து 181 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வந்தன. அரசு அறிவித்தபடி திங்கள்கிழமை அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட்டது.

முதல் நாளான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் இலவசமாக ஆதார் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

செங்கம்

செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவர்களுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் சிறப்பு முகாமினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் .கிரி., அவர்கள் துவக்கி வைத்து நடப்பு கல்வியாண்டிற்கான புதிய பாடப்புத்தகங்களை வழங்கினார்.

தொடர்ந்து செங்கம் தொகுதி செங்கம் ஒன்றியத்துக்குட்பட்ட செ அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் நலன் கருத்தில் கொண்டு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியிலேயே ஆதார் சிறப்பு முகாமினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் இரமேஷ், செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் பரிமளா.கலையரசன்,வட்டார கல்வி அலுவலர்கள் , பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள வட்டார வள மைய வளாகத்தில் தொடங்கிய ஆதாா் அட்டை பதிவு செய்யும் முகாமுக்கு ஆரணி மக்களவை உறுப்பினா் தரணிவேந்தன் தலைமை வகித்தாா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மீனா வரவேற்றாா். வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமாா் முகாமை தொடங்கிவைத்தாா்.

முகாமில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு புதிய ஆதாா் அட்டை எடுத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் ஒருங்கிணைந்த கல்வி உதவித் திட்ட அலுவலா் கிருஷ்ணன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பள்ளித் தலைமை ஆசிரியை ரேவதி, ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News