3 சரக்கு வேனில் கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவண்ணமலையில் இருந்து நாமக்கல்லுக்கு 3 சரக்கு வேனில் 6 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-04-25 01:15 GMT

திருவண்ணமலையில் இருந்து நாமக்கல்லுக்கு 3 சரக்கு வேனில் கடத்த முயன்ற 6 டவுன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு வெறையூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வெறையூர் போலீசாருடன் இணைந்து அந்த பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொளக்குடி கிராமம் சென்னபாறை பகுதியில் சந்தேகப்படும் படி நிறுத்தப்பட்டு இருந்த 3 சரக்கு வேன்களில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் ஒவ்வொரு சரக்கு வேனிலும் தலா 2 டன் ரேஷன் அரிசி மூட்டை மூட்டைகளாக கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த 4 பேரை பிடித்த விசாரித்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த பிச்சாண்டி (வயது 46), கீழ்பென்னாத்தூர் கைகுளம் பகுதியை சேர்ந்த சிவா (24), கீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மயில்சாமி (38), சோகீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்தன் (32) என தெரியவந்தது.

அதில் பிச்சாண்டி என்பவர் திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததும், மற்ற 3 பேரும் அவருக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், 3 சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News