திமுகவை ஆதரித்து திரைப்பட நடிகர் வாசு விக்ரம் வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை தொகுதியில் திரைப்பட நடிகர் வாசு விக்ரம் வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து திரைப்பட நடிகர் வாசு விக்ரம் கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள செங்கம் சட்டமன்றத் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து வாக்கு சேகரித்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களும் நடைபெற்றது.
தெருமுனைப் பிரச்சார கூட்டத்திற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டத் துணைச் செயலாளர் கிரி அவர்கள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம், ரமேஷ் மாவட்ட அமைப்பாளர் பொன் தனுசு, தென் முடியனுர் ஜெயராமன், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாழாவச்சனூர்,இளையாங்கன்னி ,பெருங்குளத்தூர், நாராயணகுப்பம், வேப்பூர், செக்கடி ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து திரைப்பட நடிகர் வாசு விக்ரம் கிராமம் கிராமமாக சென்று சிறப்புரையாற்றினார்.
திமுக அரசின் சாதனைகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கடந்த 5 ஆண்டு பணிகள் குறித்தும் விளக்கி உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து செங்கம் ஒன்றியம் குப்பநத்தம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் நடிகர் வாசு விக்ரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தப் பிரச்சாரத்தின் போது மாவட்ட கவுன்சிலர்கள் சத்யா, வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி புகழேந்தி, மாவட்ட துணை அமைப்பாளர் சங்கமித்திரை, ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி, தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், மதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மக்கள் நீதி மையம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிட கழகம், தலித் விடுதலை இயக்கம், இந்தியா கூட்டணி தோழமைக் கட்சிகளின் தோழர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.