கரும்புத் தோட்டத்தில் பெண் சடலம்: யார் அவர்? போலீசார் விசாரணை
தண்டராம்பட்டு அருகே கரும்புத் தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
தண்டராம்பட்டு அருகே கரும்புத் தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்பை காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அறுவடை செய்துக்கொண்டிருந்தனர். அப்போது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் சந்தேகமடைந்து தொழிலாளர்கள் தோட்டத்தின் மையப்பகுதியில் சென்று பார்த்தனர்.
அப்போது அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே பழனிவேல், அந்த கிராமத்தின் விஏஓ ஆனந்தனுக்கு தகவல் தந்தார்.. இதையடுத்து விஏஓ உட்பட தண்டராம்பட்டு போலீஸார், ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தனர்.
அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனடியாக போலீஸார் விசாரணையையும் துவங்கியிருக்கிறார்கள்.
கரும்பு தோட்டத்துக்கு பக்கத்திலேயே, திருவண்ணாமலை-அரூர் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில்தான், இந்த கரும்பு தோட்டம் உள்ளது. இது ஹைவேஸ் என்பதால், அருகிலேயே பெட்ரோல் பங்க் உள்ளது.. எனவே இங்கிருக்கும் சிசிடிவியில், கடந்த சில வாரங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வந்தவாசி எள்ளுப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தயாளன் மகன் விஜயகுமாா்.
கடந்த சனிக்கிழமை தனது நண்பரை பாா்க்க இரு சக்கர வாகனத்தில் பொன்னூா் கிராமத்துக்கு சென்ற இவா், இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். பொன்னூா்-இளங்காடு சாலையில் சென்றபோது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகுமாா், அங்கு சிகிச்சை பலனின்றி காலை உயிரிழந்தாா். இதுகுறித்த பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.