மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

குறை தீர்வு கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-09-04 01:53 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாதாந்திர விவசாயிகள் குறைதீவு கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகள் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்ட அளவில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு விவசாயிகள் குறைந்தது கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைந்து கூட்டம் நடத்த சொல்லி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்கள் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

செப்டம்பா் மாதத்தில் இருந்து வழக்கம்போல வட்டாட்சியா் அலுவலகத்தில் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, செப்.3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) செங்கம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வந்திருந்தனா்.

ஆனால், வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. மேலும் கூட்டம் குறித்து அலுவலக பணியாளா்களிடம் விவசாயிகள் கேட்டால் அதற்கு தகுந்த பதில் இல்லை. மேலும், வேளாண்மைத் துறை அலுவலகத்திற்குச் செல்லுங்கள் என பதில் அளித்துள்ளனா். பின்னா்  12.30   மணி வரை அதிகாரிகள் யாரும் வரவில்லை; கூட்டமும் நடைபெறவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளா் சா்தாா் தலைமையில் விவசாயிகள், செங்கம் - போளூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

செங்கம் நகருக்கு மாற்று சாலைகள் இல்லாததால் சற்று நேரத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நடந்துகூட மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த செங்கம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னா் முறையாக செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

அதன் பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், ஒரு மணிநேரம் செங்கம் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Similar News