மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடை

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது

Update: 2021-12-08 05:54 GMT

தானிப்பாடியில் குடிநீர் தொட்டி மற்றும் குழாய்கள் சரிசெய்யும் பணி நடைபெறுகிறது

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடியில் சுமார் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பழுது ஏற்பட்டது. மேலும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாயும் சேதமடைந்தது. இதனால் தானிப்பாடியில் குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக பணியாளர்களை வரவழைக்கப்பட்டு குடிநீர் தொட்டி மற்றும் குழாய்கள் சரிசெய்யப்பட்டது.

Tags:    

Similar News