செங்கத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்
செங்கத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் மேற்கு, கிழக்கு, மத்திய ஒன்றிய மற்றும் நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா்.
செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ந்து, மாவட்ட அவைத் தலைவா் கண்ணன், கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் முப்பெரும் விழா மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி மற்றும் சரவணன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
மேலும் 50 ஆண்டு காலமாக 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டில் செய்த சமூக சீர்திருத்த திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு கல்வி இது போன்ற பல்வேறு சமூக திட்டங்களை ஒருங்கிணைத்து சிந்தித்து, சிந்தித்து பார்த்து தொலைநோக்கு சிந்தனையோடு ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என வெற்றி பெற்றோமோ அதைப்போல எதிர்வரும் 2026 இல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும், அதற்கு நாம் இப்பொழுது இருந்தே ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.
அதேபோல் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் மு.கஸ்டாலின் பொறுப்பேற்று 10 தேர்தல்களை சந்தித்துள்ளார். இந்த 10 தேர்தலிலும் எண்ணிப் பார்க்காத அளவிற்கு வெற்றியை கண்டுள்ளது. இத்தனைக்கும் கிளைக் கழக நிர்வாகிகளாக உள்ள நீங்களும், கழக பொறுப்புகளில் உள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து கழகத்தின் ஆணிவேராக நம் கழக பணியை செய்ய வேண்டும் என பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, ஒன்றிய நகர அணி அமைப்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.