திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் திருக்கோயில்கள் புனரமைக்கப்படுகிறது; அமைச்சர் பேச்சு

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் திருக்கோயில்கள் அனைத்தும் புனரமைக்கப்படுகிறது, என்று அமைச்சர் வேலு பேசினார்.

Update: 2024-04-15 02:48 GMT

பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  செங்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது;

இந்த செங்கம் பேரூராட்சியில் கழிவு நீர் பணிகளுக்காக ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தார் சாலை அமைப்பதற்கு ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை மூலமாக 8 போடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என பட்டியலிட்டு அமைச்சர் பேசினார்.

மேலும் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதுதான் திருக்கோயில்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டு காலத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் நிகழ்ச்சிகளில் தான் அதிக அளவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டு உள்ளார். இந்த மண்ணில் திராவிடம் தான் மலருமே தவிர காவி மலராது.

மூன்றாண்டு கால திராவிட மாடால் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக குடும்ப அட்டைக்கு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து விடியல் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்தார்.

எடப்பாடியின் நான்காண்டு கால ஆட்சியில் எம்எல்ஏக்களை கோழி அடைகாப்பது போல் காத்தது தான் சாதனை ஆகும். ஜிஎஸ்டி ஒப்பந்தத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் கையெழுத்திட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று விலைவாசி உயர்ந்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சென்னை மாவட்டம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசிடம் நிவாரண நிதி வேண்டுமென கோரிக்கை வைத்த போது ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. இன்றைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

எப்படி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என தெரியவில்லை, என அமைச்சர் வேலு பேசினார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, கூட்டுறவு சங்க தலைவர்கள், நகர செயலாளர், நகர நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்,  பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News