தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றிய குழுத்தலைவராக, திமுக வேட்பாளர் பரிமளா வெற்றி பெற்றார்.

Update: 2021-10-22 13:48 GMT

அமைச்சர் எ வ.வேலுவை நேரில் சந்தித்து, வெற்றி பெற்ற பரிமளா வாழ்த்து பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றிய குழுத் தலைவராக,  28 வாக்குகளில் திமுக வேட்பாளர் பரிமளா கலையரசு பெற்று,  தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக வெற்றி பெற்றார்.

அவருக்கு,   செங்கம்  சட்டமன்ற உறுப்பினர் கிரி,  திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும்  ஒன்றிய திமுக செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள்,  வெற்றி பெற்ற பரிமளா கலையரசுவை வாழ்த்தினர்.  பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ.வேலுவை நேரில் சந்தித்து பரிமளா வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News