செங்கம், தண்டராம்பட்டு பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

செங்கம், தண்டராம்பட்டு பகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை வாக்கு சேகரித்தார்.;

Update: 2024-03-25 01:50 GMT

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய  அண்ணாதுரை

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் தண்டராம்பட்டு பகுதியில் திமுக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அண்ணாதுரை செங்கம் மற்றும் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு மத்திய மற்றும் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளருமான கிரி முன்னிலையில் ஒன்றிய நகர நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட வரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று அப்பகுதியில் வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து செங்கம் கிழக்கு ஒன்றியம் மேற்கு ஒன்றியம் மத்திய ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகளை பெங்களூரு சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக மூத்த முன்னோடிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணியாகவும் அடித்தட்டு மக்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு கூட்டணியாகவும், ஏழை எளிய மக்கள் சிறு தொழில் செய்பவர்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஒரு கூட்டணியாகவும் 5 ஆண்டு காலமாக மத்திய அரசால் பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கக்கூடிய ஒரு கூட்டணியாகவும் அமைந்துள்ளது.

இந்த கூட்டணியில் திமுக சார்பில் அண்ணாதுரை ஆகிய என்னை நிறுத்தியுள்ளனர், தமிழ்நாடு முதலமைச்சரின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேட்பாளரிடமும் விளக்கி வாக்கு சேகரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என அண்ணாதுரை பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கிரி, ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், ரமேஷ், நகர செயலாளர் அன்பழகன் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய செயலாள,ர் மாவட்ட கவுன்சிலர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் ,கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News