செங்கம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு
செங்கம் பாய்ச்சல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பாய்ச்சல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு மேற்கொண்டார். மையத்தின் குழந்தைகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கன்வாடி கட்டடத்தை சுற்றி மாடுகள் கட்டி இருப்பதை பார்த்து உடனடியாக மாட்டின் உரிமையாளர் மையத்தை சுற்றி வசிக்கும் மக்களை அழைத்து கால்நடைகளால் அசுத்தம் ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது, அதனால் கால்நடைகள் கட்டுவதை தவிர்க்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் இது தொடர்பாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ,தொடர்ந்து ஊரக வேலை திட்டம் மூலம் சின்ன கோலா பாடி பகுதியில் நடைபெற்று வரும் சாலை , குடிநீர் , கிணறு அமைக்கும் பணிகளை பார்வையிட்டார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உடன் இருந்தனர்.