ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள்: உதவி இயக்குனர் ஊராட்சிகள் கள ஆய்வு
செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை உதவி இயக்குனர் ஊராட்சிகள் நேரடியாக ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை உதவி இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சின்ன கோலா பாடி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாய் மேம்பாட்டு பணி, பாய்ச்சல் ஊராட்சியில் ஏரி நீர் வரத்து கால்வாய் மேம்பாட்டு பணி, மேல் பெண்ணாத்தூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, PMAY, திட்ட வீடுகள், மாட்டுக் கொட்டகை கணக்கெடுப்பு பணி, அங்கன்வாடி மையங்கள் செயல்பாடு மற்றும் மரக்கன்று நடுதல் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி பொறியாளர்கள் பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடத்தி செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின் போது, செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்கள் அரசு ஊழியர்கள் உடனிருந்தனர்.