செங்கம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-03 01:46 GMT

பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம், மேல்பென்னத்தூர் ஊராட்சி, செ.சொர்பணந்தல் ஊராட்சி, பெரியகலத்தாம்பாடி ஆகிய கிராம ஊராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஊரக வேலை திட்டம் மூலம் ஜல்லி சாலை , தார் சாலை  , பள்ளி கட்டிடம்  , கால்வாய் தூர்வார்கள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மேல் பெண்ணாத்தூர் , தளவநாயகன் பேட்டை, ஆகிய இடங்களில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார் . பின்னர் மாணவ மாணவிகளுக்கு போதிய வகுப்பறை வசதிகள் கழிப்பறை வசதிகள் சுகாதாரமாக உள்ளதா எனவும் சத்துணவு சுகாதாரமாக சமைத்து வழங்கப்படுகிறது எனவும் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்தார். அங்கிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் செங்கம் ஊராட்சி ஒன்றியம், கண்ணக்குருக்கை ஊராட்சியில் புதிய சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செ.சொர்பணந்தல் ஊராட்சி, பெரியகலத்தாம்பாடி கிராமத்தில் ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் புதிகாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், செங்கம் பேரூராட்சிகளில் அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் புதிகாக நான்கு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கம் தனியார் மண்டபத்தில் பள்ளி கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 2023-2024 குறித்து செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசினார்,

ஆய்வின்போது செங்கம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ,உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News