திருவண்ணாமலை; துப்புரவு ஊழியா்களுக்கு தினக் கூலியாக ரூ.610 வழங்கக் கோரிக்கை

துப்புரவு ஊழியா்களுக்கு தினக் கூலியாக ரூ.610 வழங்கக் கோரி, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியரிடம், சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2024-02-14 03:13 GMT

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த துப்புரவு பணியாளர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் துப்புரவு ஊழியா்களுக்கு தினக் கூலியாக ரூ.610 வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம், சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் துப்புரவு ஊழியா்களுக்கு தினக் கூலியாக ரூ.610 வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம், சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட சிஐடியு தொழிற் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் இரா.பாரி, மாவட்ட துணைத் தலைவா் பி.கணபதி மற்றும் துப்புரவு ஊழியா்கள், சங்க நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனா்.

அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் துப்புரவு ஊழியா்களுக்கு தினக் கூலியாக ரூ.610 வழங்க வேண்டும். பிடித்தம் செய்த இ.எஸ்.ஐ., இ.பி.எப். ஆகியவற்றை உரிய கணக்கில் செலுத்தி அதற்கான ரசீது வழங்க வேண்டும். தேசிய பண்டிகை காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

பண்டிகை நாள்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டைச் சம்பளம் வழங்க வேண்டும். துப்புரவுப் பணிக்கான பாதுகாப்பு உபகரணங்கள், பணி உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

செங்கம் பேரூராட்சியில் தூய்மை மற்றும் குடிநீர் பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் சீருடைகள் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் பணிபுரியும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் துப்புரவு ஆய்வாளர்கள் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News